அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தர்மபுரியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-16 18:45 GMT

தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). அரசு பஸ் டிரைவர். இவர் பென்னாகரத்தில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். தர்மபுரி பைபாஸ் சாலை அருகே வந்தபோது ஒரு வாலிபர் சாலையின் நடுவே நின்று பஸ்சை நிறுத்த முயன்றார். அங்கு டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் தர்மபுரி பஸ் நிலையத்துக்கு ஓட்டி வந்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பஸ் நிலையத்திற்கு வந்து டிரைவரிடம் ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவரை தாக்கியவர் தர்மபுரி வள்ளி நகரை சேர்ந்த திருமலைகண்ணன் (25) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்