மளிகை கடையில் குட்கா பதுக்கி விற்றவர் கைது
பென்னாகரத்தில் மளிகை கடையில் குட்கா பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷூலாராம் (வயது 36). இவர் பென்னாகரம் பழைய பஸ் நிலைய பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடையில் குட்கா பதுக்கி விற்பதாக பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த மளிகை கடையில் சோதனை செய்தபோது குட்கா பதுக்கி வைத்து விற்பது தெரிந்தது. இதையடுத்து ஷூலாராமை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.