பணம் கேட்டு மிரட்டி பேக்கரியை சூறையாடிய 2 பேர் கைது

பணம் கேட்டு மிரட்டி பேக்கரியை சூறையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-22 21:39 GMT

சேலம் தாதநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 29). இவர் குமரகிரி பைபாஸ் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவரது பேக்கரிக்கு நேற்று முன்தினம் இரவு 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த காசாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து தடுக்க வந்த டீ மாஸ்டர் செந்திலை அவர்கள் தாக்கினர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்த கண்ணாடி உள்ளிட்ட சில பொருட்களை உடைத்து சூறையாடினர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து ராஜேஷ்குமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் ராஜேஷ்குமாரின் பேக்கரியை சூறையாடியது அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த மோகன் (27), சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்