மதுபோதையில் பயணிகளிடம் தகராறு; தொழிலாளி கைது
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி டவுன் போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபோதையில் ஒருவர் பயணிகளை தகாத வார்த்தையால் பேசியும், அவர்களிடம் தகராறு செய்து கொண்டும் இருந்தார். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் காரிமங்கலத்தை சேர்ந்த தொழிலாளி சண்முகசுந்தரம் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.