சொட்டுநீர் பாசன குழாய் திருடிய வாலிபர் கைது
மொரப்பூர் அருகே சொட்டுநீர் பாசன குழாய் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் சொட்டுநீர் பாசன குழாய் அமைத்து இருந்தார். தோட்டத்தில் இருந்த சொட்டுநீர் பாசன குழாயை மர்ம நபர் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழாயை திருடிய போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ் வர்மா (வயது 19) என்பவரை கைது செய்தனர்.