கட்டிட மேஸ்திரி வீட்டில் திருட முயன்றவர் கைது

கிருஷ்ணாபுரம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-17 16:04 GMT

கிருஷ்ணாபுரம் அருகே உள்ள குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 33). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். சத்தம் கேட்டு லட்சுமணன் எழுந்ததால் அந்த நபர் தப்பி ஓடினார். இதனால் லட்சுமணன், அக்கம் பக்கத்தினர் அவரை துரத்தி சென்றனர். அப்போது அந்த நபர் கீழே விழுந்து காயமடைந்தார். அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த முனியப்பன் (32) என்பதும், லட்சுமணன் வீட்டில் திருட முயன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்