மேலும் 3 பேர் கைது
பேரிகை மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் மின்வாரிய அலுவலகத்திற்குள் 15 பேர் கொண்ட கும்பல் புகுந்து ஊழியர்களை தாக்கி விட்டு அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த வேலு (வயது 27), சரவணன் (22) மற்றும் உத்தனப்பள்ளி அருகே கூலிசந்திரத்தை சேர்ந்த நவீன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்த காசி (22), மஞ்சு (22) மற்றும் 17 வயது சிறுவன் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.