2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

அரூர் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-25 14:59 GMT

தர்மபுரி:

அரூர் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மொபட் பறிப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் பூவரசன் (வயது 42). தொழிலாளியான இவர் கடந்த மாதம் தனது மகனுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மொபட்டை வழிமறித்த 2 பேர் தந்தை, மகனை தாக்கிவிட்டு மொபட்டை பறித்து சென்றனர். இது தொடர்பாக பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த மொபட் பறிப்பில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த யுவராஜ் (24), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகிய 2 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

குண்டர் சட்டத்தில் கைது

அப்போது இவர்கள் 2 பேருக்கும் அரூர் பகுதியில் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு திருட்டு மற்றும் அடிதடி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதன்படி யுவராஜ், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்