வடமதுரை அருகே கஞ்சா வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

வடமதுரை அருகே கஞ்சா வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-20 14:29 GMT

வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி குளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கஞ்சா விற்றதாக 3 பேரை வடமதுரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் எலப்பார்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 34) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அவரை கைது செய்யும்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் சேகரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பதுங்கியிருந்த சேகரை போலீசார் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்