ரேஷன் அரிசி, கோதுமை கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி, கோதுமை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-07 15:58 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் கவாஸ்கர், மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து கிடைத்த தகவலின் பேரில் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில், கிருஷ்ணகிரி பழைய பேட்டை மக்காஹ் தெருவை சேர்ந்த வஜீர் (வயது 66) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 250 கிலோ கோதுமை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ரேஷன் பொருட்களை வாங்கி அண்டை மாநிலங்களில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்