ஆசிரியர் வீட்டில் நகை திருடிய மேலும் ஒரு சிறுவன் கைது

பெரியகுளம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான்.

Update: 2023-08-23 21:15 GMT

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுமதி. இவர், பெரியகுளம் அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதி தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட ஒரு கும்பல், வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகையை திருடிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம கும்பலை தேடி வந்தனர். அப்போது நகையை திருடியதாக அழகர்சாமிபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 24) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் 17 வயதுடைய மற்றொரு சிறுவன் தலைமறைவானான். அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்தநிலையில் அந்த சிறுவனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவன், மதுரையில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். 

Tags:    

மேலும் செய்திகள்