தேன்கனிக்கோட்டை அருகேவாலிபருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

Update: 2023-08-19 19:45 GMT

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கத்திக்குத்து

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமசேகர் (வயது 21). கூலித்தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (34). தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர் நேற்று முன்தினம் அங்குள்ள கடையில் தயிர் வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த உறவினரான சோமசேகர் அவரை தகாத வார்த்தையால் திட்டி விட்டு சென்றார்.

இதுகுறித்து செல்வி வீட்டுக்கு சென்று தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாதேஷ், சோமசேகர் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாதேஷ், சோமசேகரை கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

தொழிலாளி கைது

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு இருதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி மாதேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்