ஓசூரில் துணிகர சம்பவம்:தனியார் தொழிற்சாலையில் உதிரி பாகங்களை திருடிய 8 பேர் கைது

Update: 2023-07-29 19:45 GMT

ஓசூர்

ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் உதிரி பாகங்களை திருடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

உதிரிபாகங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில், ஒரு கனரக வாகன என்ஜின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள், லேப்டாப், ஏசி உள்ளிட்டவை திருட்டு போனது. இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசில் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சபரி வேலன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியில் வசித்து வந்த வடமாநில வாலிபர்களான சந்தீப் (வயது34), சுபத் (26), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி (42), ஓசூர் பகுதியை சேர்ந்த சிவராஜ் (20), சுனில்குமார் (19) மற்றும் 3 சிறுவர்கள் என 8 பேர், உதிரி பாக பொருட்கள், லேப்டாப், ஏசி ஆகியவற்றை திருடியது தெரிந்தது. இவர்கள் பொருட்களை வீட்டில் பதுங்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

பொருட்கள் பறிமுதல்

இதையடுத்து, போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் பழனி என்பவரே, திருட்டு பொருட்களை வாங்கும் ஸ்கிராப் கடை நடத்தி வந்து, மற்ற 7 பேரையும் ஊக்குவித்தது, இவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் திருடியதும் தெரிய வந்தது. இந்த துணிகர சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்