அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

நத்தத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-25 21:30 GMT

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் நத்தம் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர், பஸ்நிலையத்தில் இருந்து பஸ்சை நத்தத்தில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டு சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உலுப்பக்குடியை சேர்ந்த சபரிநாதன் (வயது 23), கார்த்திக் (38) ஆகிய 2 பேர் பஸ்சை வழிமறித்தனர்.

பின்னர் டிரைவர் சரவணனிடம் தங்களுக்கு ஏன் வழிவிடவில்லை? என்று அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் சரவணனை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நத்தம் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிநாதன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்