பெரியகுளம் அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது

பெரியகுளம் அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-24 21:00 GMT

பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணதாஸ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 61). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் காவலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த தோப்புக்கு பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜ் (26) என்பவர் வந்தார்.

அப்போது அவர் அங்கு கிடந்த இரும்பு கம்பியை திருட முயன்றார். இதனை பார்த்த ராஜலட்சுமி தட்டிக்கேட்டார். இதில், ஆத்திரமடைந்த நாகராஜ், ராஜலட்சுமியை தாக்கிவிட்டு இரும்பு கம்பியை திருடிச்சென்றார். இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்