மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

தேனியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-23 21:00 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே தும்மக்குண்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 59). இவர் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் இலவம் பஞ்சு மெத்தைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 19-ந்தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளை புதிய பஸ் நிலையம் அருகில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.

இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் திருடு போன மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டிச் சென்றார். அதைப் பார்த்த கண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை துரத்தி பிடித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் தும்மக்குண்டு கிழக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் (36) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்