கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து செனறு கண்காணித்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற காவேரிப்பட்டணம் அருண்குமார் (வயது49), மிட்டஅள்ளி ரஜினி (43), மாரண்டப்பள்ளி சக்திவேல் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று கடைகளில் குட்கா பதுக்கி விற்றதாக கூச்சூரை சேர்ந்த தனசேகரன் (31), சூளகிரி சீனிவாசன் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சூளகிரி டவுன் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் போகிபுரத்தை சேர்ந்த மகேஷ் (36) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து லாட்டரி சீட்டு, குட்கா, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.