ஓசூர்
ஓசூரில், வீட்டில் இளம்பெண்னை வைத்து விபசாரம் செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் சென்றது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் அட்கோ போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ஓசூர் பிருந்தாவன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் நேற்று திடீரென சோதனை செய்தனர். அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் செய்து வந்த வெங்கடாசலம் (வயது 56), அவருடைய மனைவி மதுபாலா (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.