தளி அருகேகொலை வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளியை கொல்ல முயற்சி வாலிபர் கைது

Update: 2023-07-14 19:45 GMT

தேன்கனிக்கோட்டை

தளி அருகே பழிக்கு பழியாக கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

துக்க நிகழ்ச்சிக்கு...

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஆருப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27). இவர் கடந்த 24.10.2022 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்கிற மஞ்சு (26) என்பவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மஞ்சுநாத் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா பகுதியில் தங்கி பெங்களூருவில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 12-ந் தேதி மஞ்சுநாத், தளி அருகே பசவன்னபுரம் பகுதியில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

வாலிபர் கைது

இதை அறிந்த கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனின் உறவினர் நாராயணன் என்கிற நாராயணா (26) என்பவர் அரிவாளுடன் மஞ்சுநாத் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் அவரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன் என்கிற நாராயணாவை கைது செய்தனர். பழிக்கு பழியாக ஜாமீனில் வந்த தொழிலாளியை வாலிபர் வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்