கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் மளிகை, பெட்டிக்கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மத்தூர், மத்திகிரி, ஓசூர் சிப்காட், பாகலூர், கெலமங்கலம் பகுதியில் கடைகளில் குட்கா விற்பனை செய்த மத்திகிரி சர்ஜான் ராஜ் (வயது42), பைரமங்கலம் சமபத்குமார் (25), சித்தனப்பள்ளி ஆனந்த் (48) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு பதுக்கி வைத்து இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.