பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ஜெய்விஸ்வா (வயது 21). இவர், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியிடம் பழகி வந்தார். அப்போது ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை ஜெய்விஸ்வா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தரப்பில் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஜெய்விஸ்வா மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.