2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

2 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-05 19:00 GMT

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறையின் கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின்பேரில், குடிமை பொருட்கள் கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருடன் இணைந்து வாரியங்காவல் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த கல்லாத்தூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கொளஞ்சி (வயது 31) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு, கொளஞ்சியை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ரேஷன் அரிசி அரைக்கப்பட்ட மில்லின் உரிமையாளரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்