அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது

வாலாஜா அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-30 18:19 GMT

வாலாஜாவை அடுத்த மருதாலம் கூட்ரோடு அருகே 2 நாட்களுக்கு முன்பு பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பஸ்மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பஸ் மீது கல்வீசி தாக்கியதாக ஆர்.கே.பேட்டை தாலுகா, அய்யனேரியை சேர்ந்த கதிர்வேல் மகன் மணிவண்ணன் (வயது 24) என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்