தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மது பாட்டில்களை பதுக்கி விற்ற 12 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மது போதையில் வாகனம் ஓட்டிய 30 பேர் மீதும், சாலைகளில் அதிக வேகமாக வானங்களை ஒட்டிய 50 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.