லாட்டரி சீட்டுக்கள் விற்ற 4 பேர் கைது

Update: 2023-06-29 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 34), காவேரிப்பட்டணம் பிள்ளையார் கோவில் தெரு எத்திராஜ் (65), ராயக்கோட்டை நாராயணபள்ளி எல்லப்பன் (54), தேன்கனிக்கோட்டை அப்துல் ஜப்பார் (58) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்