மொரப்பூர்:
பொம்மிடியிலில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற 9-ம் எண் அரசு டவுன் பஸ் கடத்தூர் பஸ் நிலையத்தில் நின்று சென்றது. அப்போது கடத்தூர் பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறிய மணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவர் டிக்கெட் வாங்காமல் கண்டக்டர் முருகேசனிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றியதில் மணிகண்டன், கண்டக்டர் முருகேசனை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் இதுதொடர்பாக கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய மணிகண்டனை கைது செய்தார்.