விவசாயியை தாக்கியவர் கைது

Update: 2023-06-18 19:00 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள கதவணை புதூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் சங்கர் (55). உறவினர்கள். இந்த நிலையில் பொது விவசாய கிணற்றை பயன்படுத்துவதில் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சங்கர் பொது வழியில் இருந்த தென்னை மரத்தில் இருந்த ஓலையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தன் கேட்டபோது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோவிந்தன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்