மூங்கில்மடுவு வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்த 4 பேர் கைது

Update: 2023-06-17 19:00 GMT

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மூங்கில்மடுவு வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பென்னாகரம் வனச்சரக அலுவலர்கள் செந்தில் குமார், ஆலயமணி, வனவர்கள் புகழேந்திரன், முனுசாமி, சக்திவேல் மற்றும் வனப்பணியாளர்கள் மூங்கில்மடுவு வனப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்கு சிலர் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை சமைத்து கொண்டிருந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து விசாரித்ததில் அவர்கள் மூங்கில்மடுவு பகுதியை சேர்ந்த தங்கராஜ், மாது, சிடுவம்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ், பெருமாள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை சமைத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்