எருமப்பட்டி அருகே மண் கடத்திய 3 பேர் கைது
எருமப்பட்டி அருகே மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எருமப்பட்டி
எருமப்பட்டி அடுத்த புதுக்கோட்டை ஊராட்சி கெட்டி மேடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மர்மநபர்கள் மண் வெட்டி எடுத்து விற்பனை செய்து வருவதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் தாசில்தார் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அரசு புறம்போக்கு இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் 3 டிப்பர் லாரிகளில் மண் அள்ளி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஒரு பொக்லைன் எந்திரம், 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மோகனூர் அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 30), அலங்காநத்தம் பாலப்பட்டியை சேர்ந்த ராஜா (35), புதுக்கோட்டை ஊராட்சி கெட்டு மேடு ராஜா (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மணிகண்டன், சரத்குமார், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.