கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து - நண்பர் கைது

கடனை திருப்பி கேட்ட வாலிபரை கத்தியால் குத்திய நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-06-15 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் யஸ்வின் (வயது 20). இவரும் தர்மபுரியை சேர்ந்த சந்துருவும் (21) நண்பர்கள். இவர்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. சந்துரு கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஸ்வினிடம் ரூ.10 ஆயிரம் கடனாக வாங்கியதாகவும், அதை திருப்பி தருவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தர்மபுரி அருகே பென்னாகரம் சாலையில் சந்தித்த இவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்துரு கத்தியால் யஸ்வினை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த யஸ்வினை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதை தொடர்ந்து சந்துருவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்