புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
இளையான்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக சபூர் ஆலம் பாதுஷா (வயது 46) என்பவரை புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு படையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 38 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.