ராயக்கோட்டையில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; சிக்கன் கடைக்காரர் கைது
வேகாத சிக்கனை கொடுத்ததற்கு ஏற்பட்ட தகராறில் ராயக்கோட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய சிக்கன் கடைக்காரர் கைது
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை கோட்டை முதல் தெருவை சேர்ந்தவர் ரோஷன் (வயது 41). இவர் ராயக்கோட்டையில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் ராயக்கோட்டை கோட்டை காலனியை சேர்ந்த தொழிலாளிகள் குப்புசாமி (36), சந்தோஷ் ஆகியோர் சென்றனர். இவர்கள் வேகாத சிக்கனை கொடுத்ததாக ரோஷனிடம் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அவர் சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டி குப்புசாமியை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரோஷனை கைது செய்தனர்.