கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-09 18:45 GMT

சேலம் சூரமங்கலம் அருகே சோளம்பள்ளம் பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு கஞ்சா விற்ற பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ரிஷிகுமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்