ஆடு திருடிய முதியவர் கைது

ஆடு திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-07 18:45 GMT

தேவகோட்டை அருகே உள்ள தானவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 52). இவருடைய ஆடுகள் தானாவயல்-அமராவதிபுதூர் ரோட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த தேவகோட்டை இரவுசேரி இறக்கத்தை சேர்ந்த கருப்பையா (70) என்பவர் அதில் ஒரு ஆட்டை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்