தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் கீஜனகுப்பம் பஸ் நிறுத்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டியும், பயமுறுத்தியும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்த கீஜனகுப்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் நாகராஜ் (வயது 28) என்பவரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் செல்லாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தார். இதனால் போலீசார் நாகராஜை கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.