கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2023-06-05 04:39 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் நேற்று மரிக்கம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மரிக்கம்பள்ளி சேர்ந்த வேலு (வயது 25) என்பதும், 30 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

இதேபோல் ராயக்கோட்டை போலீசார் லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த லிங்கம்பட்டி ஆனந்த் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்