ஓசூரில் சூதாடிய 6 பேர் பிடிபட்டனர்

Update: 2023-05-26 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் சாலையில் ஹவுசிங் போர்டு அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 34), கே.சி.சி. நகர் தினேஷ் (32), முல்லைவேந்தன் நகர் கோவிந்தசாமி (39), வெங்கடேஷ் நகர் ஸ்ரீதர் (33), சித்தனப்பள்ளி ரவி (38), பாரதி நகர் முனியப்பா (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 190 மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்