தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்புவனம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து (வயது 46) மற்றும் சில தொழிலாளர்கள் பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த படமாத்தூர் விலக்கு பகுதியில் தங்கி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தூங்கிக் கொண்டிருந்த முத்துவை எழுப்பி வாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து முத்து பூவந்தி போலீசில் புகார் செய்தார்.. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிவு செய்து வாளை காட்டி மிரட்டியதாக மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (22), மாரணி உசிலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.