மத்திகிரி:
ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோவை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 32). இவர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது 2 பேர் உள்ளே புகுந்து அங்கிருந்த 85 கிலோ இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். இதை கவனித்த சம்பத்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபர்களை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி ராபர்ட் (32), எஸ்.பி.எம். காலனி லோகேஷ்குமார் (22) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.