கஞ்சா விற்ற 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-17 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கஞ்சா விற்றதாக கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி துரை (வயது42), ஓசூர் சிவப்பிரகாஷ் (19) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 250 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்