குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-14 18:30 GMT

வாடிப்பட்டி, 

சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் கள்ளான்காடு பகுதியை சேர்ந்த பாபு மகன் கார்த்திக் (வயது 19). இவர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், கார்த்திக்கை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்