அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது
அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்;
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் விழுப்பனூர் அருகே கண்மாயில் டிராக்டரில் அனுமதி இல்லாமல் காரில் மண் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் தாசில்தார் ரங்கசாமி சோதனை நடத்தினார். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பிடித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். கிருஷ்ணன் கோவில் போலீசார் மணல் அள்ளியதாக தர்மர் (வயது 35), டிராக்டர் டிரைவர் கருப்பசாமி (29) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.