நிலத்தகராறில் ஆசிரியர் மீது தாக்குதல்; தனியார் நிறுவன ஊழியர் கைது

வெண்ணந்தூர் அருகே நிலத்தகராறில் ஆசிரியரை தாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-12 18:48 GMT

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அருகே உள்ள அளவாய்ப்பட்டி, வெள்ள பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). தனியார் பள்ளி ஆசிரியர். அதே பகுதியை சேர்ந்தவர் அருள்மணி (34). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கண்ணனை, அருள்மணி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கண்ணன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கண்ணன் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் அருள்மணி மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்