கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, லாட்டரி, குட்கா விற்ற 23 பேர் கைது

Update: 2023-05-11 18:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள், குட்கா விற்ற 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்காணிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

இதையடுத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்றதாக ஊத்தங்கரை, கல்லாவி, பர்கூர், கந்திகுப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது

இதேபோல் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 மற்றும் 11 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த ஊத்தங்கரை, பாரூர், ஓசூர் பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.250 மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்