கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-05-10 18:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மற்றும் போலீசார் மதுரை ரோட்டில் உள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்கள் சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்த மகேஷ் குமார் (வயது 26), முரளி (29), மதுரை ரோடு பகுதியை சேர்ந்த ரோஷன் (21) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்