விவசாயியை தாக்கியவர் கைது
பர்கூரில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;
பர்கூர்
பர்கூர் தாலுகா வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 19). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (45). விவசாயி. உறவினர்களான இவர்களின் நிலம் அருகருகில் உள்ளன. மேலும் அவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் வெங்கடேசனை, பெருமாள் தாக்கினார். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் இதுகுறித்து பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.