கஞ்சாவுடன் வாலிபர் கைது கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-02 18:45 GMT

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இந்த கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்ததை தொடர்ந்து அதனை கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தர்மமுகேஷ் (வயது 21) என்பவரை கைது செய்தனர். இவரின் நெருங்கிய உறவினரின் வங்கி கணக்கினை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதவிர அவரின் வீட்டில் கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் சோதனையிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்