கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்கா, லாட்டரி விற்ற 30 பேர் கைதுசூதாடியதாக 17 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குட்கா, லாட்டரி சீட்டுகள் விற்றதாக 30 பேரை கைது செய்த போலீசார், பணம் வைத்து சூதாடியதாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குட்கா, லாட்டரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், மகராஜகடை உள்பட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,700 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1,200 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1,630-ஐ பறிமுதல் செய்தனர்.