டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது

அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது செய்யப்பட்டார். ரூ.34 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-27 18:41 GMT

அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது செய்யப்பட்டார். ரூ.34 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளநோட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஒருவர் மது வாங்குவதற்காக 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். விற்பனையாளர் சவரி பாண்டியன் அந்த ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்தார். உடனே அவர் இது தொடர்பாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

மெக்கானிக் கைது

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகள் 68 பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மதுரை ஆனையூர், கூடல்புதூரை சேர்ந்த பிரபு (வயது40) மெக்கானிக் என்பதும், அவர் மாற்ற முயன்றது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதும் தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். மேலும் பிரபுவிற்கு யார் கள்ள நோட்டுகள் கொடுத்து, புழக்கத்தில் விடச் சொன்னது? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்