விசைத்தறி உரிமையாளரை தாக்கியவர் கைது
பள்ளிபாளையத்தில் விசைத்தறி உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அடுத்த சமய சங்கிலி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அசோக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் குளிப்பதற்காக வெள்ளைக்கல் பகுதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அசோக்குமார் மீது மோதுவது போல் வந்தனர். இதை அசோக்குமார் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி கல்லால் அசோக் குமாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். ரத்த காயத்தில் இருந்த அசோக்குமார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சேகர் மற்றும் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது ஈரோடு அசோகபுரத்தைச் சேர்ந்த அம்ஜத் (35), மம்மு (30), பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ் சித்திக் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்களில் அம்ஜத்தை போலீசார் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.